ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Update: 2018-02-22 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 754 மனுக் கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் உடனுக்குடன் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக் கப்பட்டது. மேலும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த முகாமின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மடக்கு சக்கர நாற்காலிகள், செயற்கைகால், பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி கைக்கெடிகாரம், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி உள்பட பல பொருட்களை கலெக்டர் வழங்கினார். மேலும் ரூ.61 ஆயிரம் மதிப்பில் 14 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டரையும் அவர் வழங்கினார். இந்த முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற் காக கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பிற துறைகளின் மூலமும் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் தவறாமல் கலந்துகொண்டு குறைகள், கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்