நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு
ஊட்டி அருகே நகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மலைச்சரிவுகளில் கட்டிடங்கள் கட்டுவதை தடுக்கவும் மலைப்பகுதி பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய நகராட்சிகளில் மாஸ்டர் பிளான் திட்டம் அறிவிக்கப்பட்டு, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வனப்பகுதி மற்றும் விவசாய பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்கக்கூடாது, வணிக வளாகங்கள் கட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
ஊட்டி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 200 கட்டிடங்கள் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டன. மேலும் சில கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விதிமுறை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி அருகே மஞ்சனக்கொரை பகுதியில் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்னால் நகராட்சி அனுமதி இல்லாமல் 300 சதுர அடியில் அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை கண்ணாடி பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், பாஸ்கரன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் இடிக்கும் பணி நடந்தது. முன்னதாக அந்த கட்டிடத்தை இடிக்க 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பொக்லைன் எந்திரங்கள் செல்ல வழி இல்லாததால் அவை திரும்பி சென்றன. இதனால் நகராட்சி பணியாளர்களை கொண்டு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சிவராஜ் என்பவரது வீட்டின் பின்பகுதியில் 300 சதுர அடி பரப்பளவில் நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த வீடு கடந்த 1910-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது பாரம்பரியம் மிக்க கட்டிடமாகும். இப்போது அந்த வீடு எங்களுக்கு சொந்தமாக உள்ளது. வீட்டின் பின்பகுதியில் பாதுகாப்புக்காக அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டது.
அப்பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் கட்டுவதாக முரணான தகவல் நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு நோட்டீசு கொடுத்திருந்தால், நாங்களே இடித்து அகற்றி இருப்போம். இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.