பொது இடத்தில் புகைப்பிடித்ததாக 5 பேர் கைது
பொது இடத்தில் புகைப்பிடித்ததாக வாரியங்காவலை சேர்ந்த கலையரசன் (வயது 31), இலந்தை குழியை சேர்ந்த இளங்கோவன் (45), கச்சிபெருமாளை சேர்ந்த செல்வக்குமார்(29) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரியங்காவல்,
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று ஜெயங்கொண்டம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பொது இடத்தில் புகைப்பிடித்ததாக வாரியங்காவலை சேர்ந்த கலையரசன் (வயது 31), இலந்தை குழியை சேர்ந்த இளங்கோவன் (45), கச்சிபெருமாளை சேர்ந்த செல்வக்குமார்(29) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக கச்சிபெருமாளை சேர்ந்த ராஜா (26), கபிஸ்தலத்தை சேர்ந்த பிரபாகரன் (36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.