கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
கொளத்தூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
கொளத்தூர்,
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சேத்துக்குளியை அடுத்த வெள்ள கரட்டூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த காட்டில் யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வெள்ள கரட்டூருக்குள் ஒரு காட்டு யானை புகுந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அச்சத்துடன், கூச்சலிட்டனர். அப்போது அந்த யானை கண்ணன் என்பவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ஒன்றாக இணைந்து காட்டு யானையை விரட்டினார்கள்.
ஆனால் அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டிருந்த மிளகாய் பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தது. அப்போது கிராம மக்களுடன் சேர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தின்னப்பட்டியை சேர்ந்த இருசப்பன் என்பவரை யானை துரத்தியது. இதனால் அவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார்.
மேலும் யானை அட்டகாசம் குறித்து மேட்டூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் சேர்த்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.
ஊருக்குள் புகுந்த காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த யானை மீண்டும் கிராமத்துக்குள் வரக்கூடும் என்பதால் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.