வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

துவரங்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-02-22 23:00 GMT
துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(வயது 55). இவர் மலேசியாவில் உள்ளார். இவரது மனைவி ரஹிமாபீவி. துவரங்குறிச்சியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரஹிமாபீவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் மற்றும் விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்