நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி நாகையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-02-22 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாணவரணி சார்பில் நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மண்டல மாணவரணி செயலாளர் நாத்திகபொன்முடி தலைமை தாங்கினார். நாகை நகர மாணவரணி செயலாளர் சாஹா முன்னிலை வகித்தார். திராவிடர் கழக நாகை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருப்பாளர் சோழன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரும் தமிழக அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திராவிடர் கழகம், ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாணவரணியினர், தி.மு.க.வினர், ம.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடர் கழக நாகை நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்