மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்; கணவன்–மனைவி உடல் நசுங்கிச்சாவு
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் கணவன்–மனைவி உடல் நசுங்கி பலியானார்கள்.;
நாகர்கோவில்,
பூதப்பாண்டி காட்டுப்புதூர் அருகே உள்ள காற்றாடிவிளை நேசமணி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). வாழைத்தார் வெட்டும் தொழிலாளி. அவருடைய மனைவி ஞானசெலின் (31). இவர்களுக்கு சஜிதா (8) என்ற மகளும், சஜிர் (6) என்ற மகனும் உள்ளனர்.
ஞானசெலினின் சகோதரி தக்கலை அருகே உள்ள முட்டைக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், செந்திலும், ஞானசெலினும் முட்டைக்காட்டுக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
நள்ளிரவில் கணவன்–மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பார்வதிபுரம் பகுதியில் வந்த போது அவர்களுக்கு பின்னால் பாறைபொடி ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.
பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய செந்தில் மோட்டார்சைக்கிளுடன் நடுரோட்டில் விழுந்தார். டிரைவரால் லாரியை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் டிப்பர் லாரி, கணவன்–மனைவி இருவரின் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில், ஞானசெலின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்திலுக்கு தலை மற்றும் காலில் பலத்த அடிபட்டதால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்தும் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் முசிறி அருகே உள்ள ஊரக்கரையை சேர்ந்த சரவணன் (30) என்று தெரியவந்தது.
விபத்தில் பலியான செந்தில், ஞானசெலின் உடல்களை மீட்ட போலீசார், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.