நெல்லை தியேட்டரில் சாமி–2 சினிமா படப்பிடிப்பு
நெல்லை தியேட்டரில் சாமி–2 சினிமா படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை தியேட்டரில் சாமி–2 சினிமா படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
சாமி–2
டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் சாமி–2 சினிமா படப்பிடிப்பு நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது விக்ரமின் தந்தை இறந்து விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாமி–2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த தியேட்டரின் பெயரை பி.பி. தியேட்டர் என பெயர் மாற்றி, அங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் சினிமா திரையிடப்பட்டு உள்ளது போல் பேனர்களும் கட்டி இருந்தனர். அந்த படத்தை பார்க்க மக்கள், டிக்கெட் கவுண்டரில் முண்டியடிப்பது போலவும், அரசியல்வாதிகள் வரிசையாக நிற்பது போல் துணை நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. டைரக்டர் ஹரி தலைமையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சாமி, முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். 2–வது பாகத்தில் அவருடைய மகனாக வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அவர் தொடர்புடைய காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் நெல்லையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
மற்றொரு படப்பிடிப்பு
இதுதவிர ‘விழிமூடா இரவு‘ என்ற சினிமா படப்பிடிப்பும் டவுன் ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. இதில் புதுமுக நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 சினிமா படப்பிடிப்புகள் நடந்ததால் ரசிகர்கள், பொதுமக்கள் தியேட்டர் வாசலில் குவிந்து நின்றனர். இதையொட்டி நெல்லை சந்திப்பு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.