மராட்டியத்தில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு
மராட்டியத்தில் தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் தலையை காட்ட தொடங்கியுள்ளது.
மும்பை,
மரத்வாடா மற்றும் விதர்பா மண்டலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் பல இடங்களில் பருவம் தவறிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் விளைபயிர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின.
இந்த நிலையில் மராட்டியத்தின் மரத்வாடா மற்றும் விதர்பா மண்டலங்களில் மீண்டும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய தரைக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் மரத்வாடா மற்றும் விதர்பா மண்டல சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.