மாரியம்மன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை

கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு தீயணைப்புத்துறையினர் தஞ்சையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் செயல்விளக்கம் மூலம் செய்து காட்டி வருகிறார்கள்.

Update: 2018-02-21 22:30 GMT
தஞ்சாவூர்,

இதைதொடர்ந்து தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. கோவில் 3-வது பிரகாரத்தில் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியன் கலந்து கொண்டு கோவிலில் தீப்பிடித்தால் தடுப்பது பற்றிய வழி முறைகளை செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தார். பின்னர் அவர் கோவில் அதிகாரிகள், ஊழியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்