கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌ஷன் வியாபாரிகள் 26–ந் தேதி உண்ணாவிரதம் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ரே‌ஷன் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் தொடுபுழாவில் நடந்தது.

Update: 2018-02-21 21:45 GMT
திண்டுக்கல்,

ரே‌ஷன் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் தொடுபுழாவில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி சிறப்புரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கோபகுமார், ரெஜி, ஜோஷிஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வழங்கல்துறை சார்பாக ரே‌ஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அளவில் குறைபாடு இருந்தால் வாங்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26–ந் தேதி எர்ணாகுளத்தில் நடைபெறும் உண்ணாவித போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்