பாதை பிரச்சினையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

திண்டுக்கல் அடுத்துள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் வினோத்.

Update: 2018-02-21 21:45 GMT
திண்டுக்கல்,

கட்டப்பனையை அடுத்துள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 40). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜோயி (64) என்பவருக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்துள்ளது.  சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த, ஜோயி தனது மனைவி மேரிகுட்டி (62), மகன் ஆண்டனி (32) ஆகியோருடன் சேர்ந்து வினோத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வினோத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கட்டப்பனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கட்டப்பனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்