எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் பதவி வகிப்பது தவறல்ல: நாராயணசாமி பேட்டி
எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் பதவி வகிப்பது தவறல்ல என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் எம்.எல்.ஏ.க் கள் வாரிய தலைவர் பதவி வகிப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர்கள் இரட்டை ஆதாய பதவி வகிப்பதாகவும் அவர்களது பதவியை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாரிய தலைவர்களின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் முன்பு தலைமை செயலாளராக பணிபுரிந்த மனோஜ் பரிதா தனது உத்தரவுகளை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பெடி புகார் அனுப்பி உள்ளார். மேலும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு புகார் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறும்போது, எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர்களாக பதவி வகிப்பது தொடர்பாக புதுவையில் தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வாரிய தலைவர் பதவி வகிப்பது தவறல்ல. மேலும் விதிகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் செலவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.