பயிர் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை துறையின் மூலம் 2016-17-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் விரைந்து வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டிற்கு வங்கிகள் மூலம் பயிர் காப்பீட்டிற்கான பிரிமியம் பெறப்பட்டு, அதன் மூலம் கணக்கீடு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீடு நிர்ணயம் செய்து அதற்குரிய இழப்பீட்டு தொகையை மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பயிர் காப்பீட்டிற்கான பிரிமியம் செலுத்தியதற்கான பாலிசியை தவறுதலாக வருவாய் கிராமம் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டு தொகையினை கணக்கிட்டு மீதமுள்ள தொகையை வழங்கும் வகையில் விடுபட்ட 408 விவசாயிகளின் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு நிலுவை தொகையாக வழங்கப்படவுள்ள ரூ.1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 13-ஐ சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு 20 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 2016-ம் ஆண்டு விவசாயிகள் பிரிமியம் தொகை செலுத்திய போதிலும், அறிக்கையில் பிரிமியம் செலுத்திய விவரம் தவறுதலாக சென்ற காரணத்தால் விடுபட்டுள்ள 3 ஆயிரத்து 124 விவசாயிகளின் விவரங்களை ரசீதுடன் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வங்கி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அனுப்பி வைத்ததில் இருந்து 25 நாட்களுக்குள் அதன்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை அளிக்க வேண்டும். உறுதிமொழி படிவம் உரிய நேரத்தில் சமர்ப்பிக்காத இனங்களில் ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.