ஊட்டி அருகே வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள பைகமந்து கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த மாதம் 1-ந் தேதி பழனி பாத யாத்திரைக்கும், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நள்ளிரவில் ஒரே நேரத்தில் 10 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி சென்றனர். அதில் போஜன் (வயது 56) என்பவர் வீட்டில் ரூ.35 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் நகை திருடுபோனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் பாலாடா அருகே உள்ள மேல்கவ்வட்டி பகுதியை சேர்ந்த இந்திரா, ரஞ்சித், ஒட்டிமர ஓசஹட்டி கிராமத்தை சேர்ந்த நித்யா ஆகியோரின் வீடுகள் உள்பட ஊட்டி நகரம் மற்றும் ஊட்டி ஊரகப்பகுதிகளில் மொத்தம் 40 வீடுகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கடந்த 2 மாதங்களில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கதவுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளனர். அதில் சில வீடுகளில் பொருட்கள் ஏதும் திருட்டு போகாததால், கதவின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடர்களின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், பாஸ்கரன், விநாயகம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருடர்களை வலைவீசி தேடும் பணி நடந்து வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் பெயர் பட்டியலை வைத்து விசாரணை நடத்தியதில், 2 நபர்களின் அங்க அடையாளங்கள் ஊட்டியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த 2 பேரின் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லவ்டேல் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனே அவர்களை போலீசார் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பைகமந்து அருகே உள்ள வெல்பெக் பகுதியை சேர்ந்த ராஜா (33), கோவை ரத்தின புரியை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகியோர் என்பதும் ஊட்டி நகர் மற்றும் ஊட்டி ஊரகப்பகுதிகளில் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும், தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 13 பவுன் தங்க நகை, வெள்ளி நாணயங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜா, மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருட்டு சம்பவங்களில் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.