குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில், குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நாளைமறுநாள் (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
அதன்படி நேற்று கிருஷ்ணகிரி அடுத்த மேல்கரடிகுறி அங்கன்வாடி மையத்தில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடந்தது. இதில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. இதே போல ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் என மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட்டது.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பிரியராஜ் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 59 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ‘ஏ’ சத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உடல், மனவளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும் வைட்டமின் ‘ஏ’ சத்து, கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்குவதால் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 2 மி.லி. அளவும் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.