சம்பா அறுவடை பணிகள் தீவிரம்
திருமருகல் ஒன்றியத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திட்டச்சேரி,
காவிரி டெல்டா பகுதியான நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீரை நம்பியும், வடகிழக்கு பருவமழையை நம்பியுமே குறுவை, சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டு கனமழை காரணமாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து 2016-17-ம் ஆண்டு கடும் வறட்சியின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் கருகின.
இந்த நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் பொய்த்து போனது. அதைதொடர்ந்து சம்பா சாகுபடிக்கும் மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் கால தாமதமாகவே சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நெற்பயிர்கள் முளைத்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 10 நாட்கள் பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான வயல்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
அதைதொடர்ந்து தண்ணீரை வடிக்கட்டிய விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். இந்த முறை மட்டும் விவசாயிகள் ஒருபோக சாகுபடியை 3 முறைக்குமேல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் மீதமுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருமருகல் ஒன்றியம் குத்தாலம், இரவாஞ்சேரி, நரிமணம், கோபுராஜபுரம், திட்டச்சேரி, வாழ்குடி, விற்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.