நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதையொட்டி வருகிற 28–ந்தேதிக்குள் மனுக்கள் அனுப்பலாம் என்று உதவி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-02-21 20:30 GMT
நெல்லை,

நெல்லை வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதையொட்டி வருகிற 28–ந்தேதிக்குள் மனுக்கள் அனுப்பலாம் என்று உதவி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

மனுக்கள் அனுப்பலாம்

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், மண்டல ஆணையாளர் சனத் குமார் தலைமையில் ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 12–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் குறைகள் ஏதேனும் தீர்க்கப்படாமல் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய மனு அனுப்பலாம். மனுவின் மேலை ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்று குறிப்பிட்டு மண்டல ஆணையாளர், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, திருநெல்வேலி –7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனுக்கள் வருகிற 28–ந்தேதிக்குள் இந்த அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

குறைதீர்க்கும் கூட்டம்

இதை தொடர்ந்து மார்ச் மாதம் 12–ந்தேதி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணிக்கும், தொழில் அதிபர்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும், வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.

மனு அனுப்பியவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மண்டல ஆணையாளர் சனத் குமாரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நெல்லை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்