கழுகுமலை அருகே கோர விபத்து: பஸ்கள் மோதல்; 16 பேர் காயம்
கழுகுமலை அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.
கழுகுமலை,
கழுகுமலை அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.
பஸ்கள் மோதல்
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் இருந்து நேற்று மதியம் கழுகுமலைக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதேபோன்று கழுகுமலையில் இருந்து நெல்லைக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மதியம் 12 மணி அளவில் கழுகுமலை அருகே பழங்கோட்டை வளைவு ரோட்டில் திரும்பியபோது, 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளாகின.
இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன. இந்த விபத்தில் அந்த பஸ்களில் பயணம் செய்த கழுகுமலை அருகே சி.ஆர்.காலனியை சேர்ந்த ஜமுனாராணி (58), ஞானசேகர் மனைவி ஜெயசுதா (30) உள்ளிட்ட 16 பேர் காயம் அடைந்தனர்.
2 பெண்கள் படுகாயம்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த ஜமுனாராணி, ஜெயசுதா ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.