புத்துணர்வு முகாமுக்கு சென்ற காந்திமதி யானை நெல்லை வந்தது கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு
புத்துணர்வு முகாமுக்கு சென்ற காந்திமதி யானை நெல்லை வந்து சேர்ந்தது. யானைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீபாராதனை காட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை,

கோவில் யானைகள்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
முகாமில் கலந்து கொண்ட யானைகளுக்கு இயற்கை உணவுகள், ஆரோக்கியத்திற்கான குளியல் மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்பட்டன.
காந்திமதி யானை
இந்த புத்துணர்வு முகாமிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி, திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் யானை சுந்தரவள்ளி ஆகிய யானைகள் சென்று இருந்தன. இந்த யானைகள் முகாமை முடித்து விட்டு நேற்று காலையில் லாரிகள் மூலம் அந்தந்த கோவில்களுக்கு வந்து சேர்ந்தன.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரி கலையரங்கத்தில் லாரி மூலம் வந்து இறங்கியது. யானைக்கு கோவில் சார்பில் நிர்வாக அதிகாரி ரோஷினி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை சந்திப்பில் இருந்து யானை கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. கோவில் முன்பு யானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
80 கிலோ எடை குறைந்தது
புத்துணர்வு முகாமிற்கு சென்று திரும்பிய நெல்லையப்பர் கோவில் யானைக்கு பயண களைப்பு நீங்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அந்த தண்ணீரில் யானை உற்சாகமாக குளித்தது. முகாமிற்கு செல்லும் போது காந்திமதி யானை, 4 ஆயிரத்து 430 கிலோ இருந்தது. தற்போது 80 கிலோ எடை குறைந்து 4 ஆயிரத்து 350 கிலோவாக உள்ளது. எடை குறைவாக இருந்தாலும் யானை உற்சாகமாக உள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் யானை ஆதிநாயகி, இரட்டை திருப்பதி கோவில் யானை லட்சுமி, திருக்கோளூர் கோவில் யானை குமுதவள்ளி ஆகிய யானைகளும் புத்துணர்வு முகாமுக்கு சென்று திரும்பின. அந்தந்த கோவில்களில் யானைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.