வெள்ளோட்டத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடியில், சாலையில் வீணான குடிநீர்
முத்தையாபுரம் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கான திட்ட வெள்ளோட்டத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தூத்துக்குடியில், சாலையில் ஓடி குடிநீர் வீணாகியது.
ஸ்பிக்நகர்,

குழாயில் உடைப்பு
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துக்கள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த விரிவாக்க பகுதிகளுக்கு, குடிநீர் வழங்குவதற்காக 4–வது குடிநீர் குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மருதூரில் இருந்து குழாயில் கொண்டு வரப்படும் தண்ணீர் அத்திமரப்பட்டி பொன்நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவதற்காக, நேற்று வெள்ளோட்டம் நடந்தது.
சாலையில் வீணாகிய குடிநீர்
அப்போது, தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் உள்ள கீதாநகர் பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடி வீணாகியது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். பின்னர் குழாய் உடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.