மஞ்சள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

அம்மாபாளையம் கிராமத்தில் மஞ்சள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

Update: 2018-02-21 00:00 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் கல்லேரி அருகில் வேளாண்மை விற்பனைக் குழுவுக்கு சொந்தமான மஞ்சள் சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது மஞ்சள் சேமிப்பு கிடங்கின் செயல்பாடுகள் குறித்து இணை இயக்குனர் செண்பகராஜ், செயலாளர் மாரியப்பன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

மேலும் மஞ்சள் சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் கிடங்கை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

அப்போது செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தன், ஆரணி தாசில்தார் சுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் ஓம்ஆனந்தராஜ், வேளாண்மை துணை இயக்குனர் திவ்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் வேடியப்பன், வெங்கடேசன், கிடங்கு பொறுப்பாளர் எழிலரசு, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைராஜ், பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்