காமக்கூர் கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா
ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆரணி,
ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடைத்துறை இணை இயக்குனர் குருமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு 85 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வழங்கி பேசுகையில், ஆரணி தொகுதியில் இதுவரை 15 கிராமங்களை சேர்ந்த 1,495 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. காமக்கூரில் உள்ள சந்திரசேகரசாமி கோவிலில் புதிய தேர் ரூ.33 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வூரில் கால்நடை மருத்துவமனை கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. நரியம்பாடி கிராமத்திற்கு ரூ.29 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது’ என்றார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அரையாளம் வேலு, பி.ஆர்.ஜி.சேகர், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், வைகை கூட்டுறவு சிறப்பு அங்காடி தலைவர் ஜோதிலிங்கம், கால்நடைத்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், கால்நடை டாக்டர்கள் கிருஷ்ணகுமார், அன்னலட்சுமி, ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரிபாபு, காமக்கூர் முன்னாள் தலைவர் சுப்பிரமணி மற்றும் காமக்கூர் ஊராட்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.