வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் கடைகள் அடைப்பு
புதுவை அரசின் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுவையில் சமீபத்தில் தொழில்வரி, வணிக உரிமை கட்டணம், நகராட்சி கடைகளுக்காக வாடகை கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் குடிநீர், மின்சார கட்டணம், சொத்து வரி போன்றவையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதுதவிர குப்பை அள்ளுவதற்கு நகராட்சி சார்பில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்தநிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக சபை, தொழில் வர்த்தக பேரமைப்பு நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது வரி உயர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று இந்த இரு அமைப்புகளும் தெரிவித்தன.
பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்காததால் அதிர்ச்சியடைந்த புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டபடி கடையடைப்பு நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று புதுவையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி புதுவை பஸ் நிலையம், 100 அடிரோடு, மறைமலையடிகள் சாலை, நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் வரை பூட்டியே கிடந்தன. அதேநேரத்தில் ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன.
புதுவை பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், மீன் மார்க்கெட் போன்றவற்றில் கடைகள் பூட்டி இருந்தன. சினிமா தியேட்டர்களில் காலைக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு ஆதரவாக மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
நகரப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் சுற்றுலா வந்து இருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதனால் சாலை ஓர ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலையில் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பிற்பகலில் குபேர் பஜார், நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடையடைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் கடை வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூலக்குளம், ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
காரைக்கால் வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. காரைக்காலில் முக்கிய வீதிகளான பாரதியார் வீதி, காமராஜர் சாலை, திருநள்ளாறு வீதி, மாதாகோவில் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தது. தமிழக, புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் ஓடியது. தனியார் பஸ்கள், வேன், ஆட்டோ, லாரிகள் இயங்கவில்லை. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது.