போலியான இந்திய குடியுரிமை அடையாள அட்டையை பயன்படுத்தி வேலை செய்பவர்களை கண்டறிய வேண்டும், இந்து முன்னணி கோரிக்கை
போலியான இந்திய குடியுரிமை அடையாள அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் வேலை செய்பவர்களை கண்டறிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்,
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவினாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தத்தின் மகள் பூர்ணாதேவி. இவர் செட்டிப்பாளையம் பிரிவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது, அதே நிறுவனத்தில் போலியான அடையாள அட்டையுடன் வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக் வேலை செய்தார். அப்போது பூர்ணாதேவியை காதலித்து வங்காளதேசத்துக்கு அவர் கடத்தி சென்றார். அங்கு பூர்ணாதேவியை வேலைக்கு அனுப்பி கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த 9-ந் தேதி பூர்ணாதேவி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி ரிமுஷேக் மற்றும் குடும்பத்தினர் பூர்ணாதேவியின் சடலத்தை புதைக்க முயன்றுள்ளனர். ஆனால் உள்ளூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சடலத்தை பறிமுதல் செய்து அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பெண்களின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிமுஷேக் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தது எப்படி?, போலியான இந்திய நாட்டின் குடியுரிமை அடையாள அட்டையை அவர் எப்படி பெற்றார்?, போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி போலியான இந்திய குடியுரிமை அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வேலை செய்பவர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டறிய வேண்டும். பின்னர் அவர்களை நாடு கடத்த வேண்டும். பூர்ணாதேவியின் உடலை அவினாசிக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூர்ணாதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.