போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி, லாரி டிரைவர் கைது

திருட்டு மணல் அள்ளி வந்ததை தடுத்த போது லாரியை ஏற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-20 21:35 GMT
கண்டமங்கலம்,

கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அம்மனங்குப்பம் பகுதியில் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செல்வதற்காக நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால் அந்த லாரியை டிரைவர் நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மீது ஏற்றி கொலை செய்வது போல் வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை சோதனை செய்ததில் சங்கராபுரம் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் அவர் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் கோபியை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக லாரியை ஓட்டிவந்த பண்ருட்டி அருகே உள்ள உறையூரை சேர்ந்த மோகன் (வயது 31) என்பவரை கைது செய்தார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்