புகைப்பட பயிற்சிபெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

Update: 2018-02-20 22:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 18 முதல் 40 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளியின் தன்மை சதவீதம்:- கை, கால் பாதிக்கப்பட்டவர் (40 முதல் 60 சதவீதம் வரை), செவித்திறன் பாதிக்கப்பட்டவர் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றியோர். மேற்கண்ட பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற்றம் அளிக்கும் வகையில் இருப்பதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்