பெண் போலீசாரை தாக்கிய வாலிபர் கைது

புனேயில் பெண் போலீசாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-20 20:57 GMT

புனே,

புனே வாகட், சாங்வி கால்வாடி சவுக் பகுதியில் சம்பவத்தன்று 2 பெண் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நம்பர் பிளேட் பொருத்தாத காரில் வந்தார்.

இதையடுத்து பெண் போக்குவரத்து போலீசார் அந்த காரை வழி மறித்தனர். மேலும் நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்ததற்கு அபராதம் செலுத்துமாறு அந்த வாலிபரிடம் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர், திடீரென பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வாகட் போலீசார், அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர் தாலேகாவ் பகுதியை சேர்ந்த தனஞ்செய் வல்சாதிகர் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்