ஒகி புயல் தாக்கி 3 மாதங்கள் ஆன பிறகும் முழு நிவாரணம் வழங்கவில்லை
“ஒகி புயல் தாக்கி 3 மாதங்கள் ஆன பிறகும் முழு நிவாரணம் வழங்கப்படவில்லை” என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஒகி புயல் தாக்குதல் காரணமாக வரலாறு காணாத பாதிப்பை குமரி மாவட்டம் சந்தித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டு 3 மாதங்கள் ஆன பிறகும் விவசாயிகளுக்கு நிவாரண தொகை முழுமையாக வழங்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிற வகையில் மிக குறைவான நிவாரண தொகை வங்கிகளில் செலுத்துப்படுவதாக வரும் தகவல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிராக இருந்தாலும் சரி, ரப்பராக, தோட்டப்பயிராக, வாழையாக இருந்தாலும் சரி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களிடம் பிரதமர், முதல்-அமைச்சர் நேரடியாக பாதிப்பு விவரங்களை கேட்டறிந்துள்ளனர். அதேபோல் மீனவர்கள் குடும்பங்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளாமல் உள்ளன. காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையைகூட உறுதிப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசாங்கம் வழங்கியதைப்போல நிவாரணம் வழங்கக்கோரியும் வழங்க மறுக்கிறார்கள்.
50 கிலோமீட்டர் தூரத்தில் அருகாமையில் இருக்கும் கேரளாவில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனநிறைவான வகையில் நிவாரணப்பணிகள் நடக்கிறபோது குமரி மாவட்டத்தில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இன்னும் போராட்டக்களமாக நீடிப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த ஒரு தொகையும் இதுவரை வழங்கவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். அதிலும் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. காவிரி பிரச்சினையில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டன. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி வாய்திறக்க மறுக்கிறார். காவிரி வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற முறையில் ஏற்கிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாகவோ, நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி சென்னைக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார். எனவே காவிரி பிரச்சினை, குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதித்தவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக பிரதமருக்கு சென்னை சேப்பாக்கத்தில் கருப்புக்கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம்.
காவிரி வழக்கு தீர்ப்பின் மீதான மேல்நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்க தமிழக அரசின் சார்பில் வருகிற 22-ந் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். காவிரி பிரச்சினைக்காக பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கு எங்களை அழைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தால்கூட, அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படுகிற தீர்மானங்கள், தமிழக உரிமைகளை மீட்டெடுக்கிற வகையில் அமைய வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த தீர்மானங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வருகிற 24-ந் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறபோது சந்தித்து வலியுறுத்துவதற்கான அனுமதியையும், நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விடுக்கிற வேண்டுகோள் ஆகும்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கும் முடிவை பிரதமரிடம் தெரிவிப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டு, அதற்கு பிரதமர் ஒத்துக்கொண்டு நேரம் ஒதுக்கினால் எங்களது கருப்புக்கொடி போராட்டம் வாபஸ் பெறப்படும்.