அரசு பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் மார்ச் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வித்துறையை பொருத்தவரை தமிழக அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாண வர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் அடுத்த மாதம் (மார்ச்) முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் 48 மணி நேரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்வழி ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக புத்தக வடிவில் பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க உள்ளோம். முதற்கட்டமாக 16 ஆயிரம் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கவுன் சிலிங் வழங்கப்பட உள்ளது.
தேர்வு சமயங்களில் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் -1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்கு கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தேர்வு நேரம் 2½ மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது.
எனவே மாணவ-மாணவிகள் பயமின்றி தேர்வு எழுதலாம். இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை, காஞ்சீபுரம், கோவை உள்ளிட்ட அரசு பள்ளிகளில் வை-பை வசதியை அறிமுகம் செய்ய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பதில் அளிப்பார் என்றார்.