மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு

வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-02-20 22:00 GMT
வாலாஜாபாத்,

வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சித்தன் (வயது 18). முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் செந்தில்குமார் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் சித்தன், செந்தில்குமார் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து அய்யம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செந்தில்குமார் ஓட்டிவந்தார்.

காஞ்சீபுரம்-வாலாஜாபாத் சாலையில் கன்னிகா புரம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். சித்தன் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமார் காயங்களுடன் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்