துக்கம் விசாரிக்க சென்றபோது விபத்து: பலியான 9 பேரின் உடல்களும் பனப்பாக்கம் அருகே அடக்கம்
காஞ்சீபுரம் அருகே நடந்த விபத்தில் பலியான பனப்பாக்கத்தை சேர்ந்த 8 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஒருவரின் உடல் எரிக்கப்பட்டது. அரசு நிவாரணம் அறிவிக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் பால் வியாபாரி. இவருடைய உறவினர் தேவன்மணி என்பவர் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல்அம்பேத்கர் நகரில் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்த துக்கம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் பெருமாள் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மினிவேனில் புறப்பட்டார். மினிவேனில் 24 பேர் சென்றனர்.
வேன் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பர்கூரில் இருந்து வந்த தனியார் நிறுவன பஸ், மினிவேனின் பின்பகுதியில் மோதியது. இதில் மினிவேனில் பயணம் செய்த பெருமாளின் தாய் சின்னப்பொண்ணு, தங்கைகள் பஞ்சமி, முத்தம்மாள், தம்பி ஆளவட்டான், பெருமாளின் தம்பி மனைவி சுமித்ரா (40) மற்றும் பரிமளா, முத்தம்மாள், ராஜிக்கன்னி, இந்திரா ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரின் உடல்களும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிறுணமல்லி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
விபத்தில் பலியான 9 பேரின் உறவினர்களும் நேற்றுகாலை முதலே பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுணமல்லி கிராமத்தில் குவியத்தொடங்கினர். சிறியகிராமத்தில் 9 பேரின் உறவினர்களும் திரண்டதால் கிராமம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், அவளூர், சோளிங்கர், பாணாவரம் போலீஸ் நிலையங்களில் இருந்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு அனைவரின் உடல்களும் சிறுணமல்லி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்று 9 பேரின் வீடுகளுக்கு முன்பும் வைக்கோல் போட்டு தீ வைத்து எரித்தனர். பின்னர் 9 பேரின் உடல்களுக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
சு.ரவி எம்.எல்.ஏ.வும் மலர்மாலை வைத்து அஞ்சலிசெலுத்தி, அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து விடுதலைசிறுத்தைகள் கட்சியினர், போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை உதவிகலெக்டர் வேணுசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் 9 பேரின் உடல்களும் போலீஸ்பாதுகாப்புடன் அங்குள்ள மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு ஆளவட்டான் உடல் மட்டும் எரிக்கப்பட்டது. மற்ற 8 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. சிறுணமல்லி கிராம மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்களும் அங்கு திரண்டு இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.