பிரதமர் மோடி விழாவை சிவசேனா புறக்கணித்தது; போராட்டம் நடத்திய 23 பேர் கைது
பிரதமர் நரேந்திர மோடியின் நவிமும்பை விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவை சிவசேனா புறக்கணித்தது. போராட்டம் நடத்திய சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை.
மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே சுமூகமான உறவு இல்லை. இந்தநிலையில், நேற்று நவிமும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். ஆனால் அந்த விழாவை சிவசேனா கட்சி புறக்கணித்தது.
இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த உரன் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் போயிர், என்னையும், மாவல் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங் பர்னேயையும் வேண்டுமென்றே பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்காமல் பா.ஜனதா புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “இது மாநில அரசு ஏற்பாடு செய்த விழா. விமான நிலையம் அமைய உள்ள இடம் எங்களது இருவரின் தொகுதியில் வருகிறது. ஆனாலும் எனக்கும், எம்.பி.க்கும் அழைப்பு விடுக்காதது ஜனநாயக நடைமுறை விதிகளுக்கு எதிரானது. மக்கள் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அவமானம். பா.ஜனதாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் ” என்றார்
இதற்கிடையே சிவசேனாவின் செய்தி தொடர்பாளர், ‘தங்கள் கட்சியை சேர்ந்த மந்திரிகள் மற்றும் எம்.எம்.ஏ.க்கள் யாரும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளவில்லை’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் மனோஜ் போயிர் எம்.எல்.ஏ. தலைமையில் நவிமும்பை விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்த பகுதியில் சிவசேனா கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ. மனோஜ் போயிர் உள்பட 23 பேரை கைது செய்தனர்.