வாரிய தலைவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்களா? விசாரிக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவு
புதுவை வாரிய தலைவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரிய தலைவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் முறைகேடு நடந்ததாக புகார்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய அறிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமை செயலாளருக்கு அனுப்ப கேட்டுள்ளார். தலைமை செயலாளர் அதனை கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கவர்னரின் இந்த உத்தரவு புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.