ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 70 ஜோடிகளுக்கு திருமணம் அமைச்சர் காமராஜ் தகவல்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருவாரூரில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.;

Update:2018-02-19 04:15 IST
திருவாரூர்,

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது. இதற்காக விழா அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

சீர்வரிசை பொருட்கள்

இவர்களுக்கு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்