பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
சூளகிரி அருகே பஸ்சில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
சூளகிரி,
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் காமன்தொட்டிக்கு வந்த போது திம்மராஜ் என்பவரின் மனைவி கவிதா (வயது 28) என்பவர் பஸ்சில் ஏறினார். பின்னர் அட்டகுறுக்கி பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக அவர் படிக்கட்டு அருகில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார். கவிதா அட்டகுறுக்கி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். வேலைக்காக வரும் வழியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.