2 வீடுகளில் ரூ.4¾ லட்சம், 22 பவுன் நகைகள் கொள்ளை
அதியமான்கோட்டை அருகே 2 வீடுகளில் ரூ.4¾ லட்சம் மற்றும் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி ராயர்நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 38). அரசு பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வீட்டிற்கு வந்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 17 பவுன் நகைகள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மாடி வழியாக ஏறி கதவை உடைத்து உள்ளே புகுந்து, நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.
அதியமான்கோட்டை என்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (47). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு சென்றுவிட்டு நேற்று காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், 5 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.
இதே போல சக்திநகரை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் அன்பரசு என்பவருடைய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்துள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவசங்கர், ஆனந்தன், அன்பரசு ஆகியோர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அதியமான்கோட்டை அருகே 2 வீடுகளில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம், 22 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.