சிறுத்தைப்புலியை வெட்டிக்கொன்ற விவசாயி
கிருஷ்ணகிரி அருகே பால் கறக்க சென்றபோது தன்னை தாக்கிய சிறுத்தைப்புலியை விவசாயி அரிவாளால் வெட்டிக்கொன்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 62). விவசாயி. இவர் தனது மாந்தோப்பில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அவர் காலையில் மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு பால் கறந்து வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை அவர் மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு, பால் கறக்க சென்றார். அப்போது மாந்தோப்புக்கு ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்த சிறுத்தைப்புலி ராமமூர்த்தி வளர்த்து வந்த பசு மாடு ஒன்றின் மீது பாய முயன்றது. இதை கவனித்த ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்த கம்பால் சிறுத்தைப் புலியை விரட்ட முயன்றார்.
ஆனால் திடீரென சிறுத்தைப்புலி ராமமூர்த்தி மீது பாய்ந்து தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்த அரிவாளை எடுத்து சிறுத்தைப்புலியின் முகத்தில் அவர் வெட்டினார். இதில் சிறுத்தைப்புலி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது. இது குறித்து ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
காயம் அடைந்த ராமமூர்த்தியை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, கிருஷ்ணகிரி வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றார்கள். கொல்லப்பட்ட சிறுத்தைப்புலியை மீட்டு அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அங்கு வந்தனர். கொல்லப்பட்ட சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதன் உடல் அருகில் உள்ள வனப் பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயி ராமமூர்த்தி கூறும் போது, நான் பால் கறக்க சென்ற போது மாட்டின் மீது சிறுத்தைப்புலி பாய்ந்தது. அதை தடுக்க முயன்ற போது என் மீது பாய்ந்தது. இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காகவே நான் சிறுத்தைப் புலியை அரிவாளால் வெட்டினேன் என்றார்.
கொல்லப்பட்ட சிறுத்தைப்புலி ஏற்கனவே ஏதோ ஒரு விபத்தில் காயம் அடைந்துள்ளது. இதனால் அதன் கால் பகுதியில் புண் ஏற்பட்டு புழு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக வனத்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.