கவர்ச்சியான கழிவறை

தூய்மை குறைபாடும், துர்நாற்றமும் அச்சுறுத்துவதால் பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதற்கு பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள்.

Update: 2018-02-18 08:45 GMT
தூய்மை குறைபாடும், துர்நாற்றமும் அச்சுறுத்துவதால் பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதற்கு பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சீனாவின் சோங்க்விங் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 5 நட்சத்திர பொதுக்கழிப்பறையை இதில் சேர்க்க முடியாது. ஏனெனில் பொது கழிப்பிடம் என்றாலும், அதை ஐந்து நட்சத்திர விடுதி அளவிற்கு பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

மார்பிள் தரை, கிரானைட் சுவர், மரத்தால் ஆன கதவுகள், அலங்கார விளக்குகள், குளிர் சாதன வசதி என்று பிரமிக்க வைக்கிறது, அந்த கழிப்பறை. அழகான ஓவியங்களும், செடிகளும், மென்மையான இசையும் கழிப்பிட சூழலை மறக்கடித்து, சூழலை ரம்மியமாக்குகின்றன. இதன் முன்புற சுவர்கள் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உள்ளிருந்தபடி வெளியே நடப்பவற்றைக் கவனிக்கலாம். ஆனால் வெளியிலிருந்து உள்ளே இருப்பவற்றை பார்க்க முடியாது. பகல் நேரங்களில் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளே வரவைப்பதற்காகவும், மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காகவும் இந்தக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்தக்கழிப்பறையை பராமரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் முதல் முறை இந்தக் கழிப்பறைக்கு வருகிறவர்கள், 5 நட்சத்திர விடுதிக்குள் நுழைந்துவிட்டோமோ? என்று பிரமிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்