சக்கர நாற்காலியும்.. கூடைப்பந்தும்.. - நிஷா குப்தா
நிஷா குப்தா, முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளானவர். 18 வயது வரை அவருடைய வாழ்க்கை வசந்தமாகத்தான் நகர்ந்திருக்கிறது.
நிஷா குப்தா, முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளானவர். 18 வயது வரை அவருடைய வாழ்க்கை வசந்தமாகத்தான் நகர்ந்திருக்கிறது. பெற்றோருடன் சுற்றுலா சென்றவர் சகோதரருடன் சுவரில் ஏறி மாம்பழம் பறிக்க முயற்சித்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தவர் முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். தொடர் சிகிச்சைக்கு பிறகு சக்கர நாற்காலிதான் அவருடைய உலகமாக மாறிப்போனது.
வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்காமல் வெளி உலக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். நீச்சலுக்கும், கூடைப்பந்து விளையாட்டுக்கும் அவருடைய உடல் ஒத்துழைப்பு கொடுத்தது. இரண்டிலும் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டார்.
30 வயதாகும் நிஷா,மும்பையைசேர்ந்தவர். இன்று நீச்சலில் தேசிய விளையாட்டு வீராங்கனையாகவும், கூடைப்பந்து போட்டியில் சர்வதேச வீராங்கனையாகவும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் நீச்சல் அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கிறது. அதில் மாநில அளவில் 3 தங்கப்பதக்கங்களும், தேசிய அளவிலான போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றிருக்கிறார். 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த சக்கர நாற்காலியில் விளையாடுபவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் முதன் முதலாக பங்கேற்றார். முதல் முயற்சியிலேயேஇவரது அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. தற்போது மகாராஷ்டிராவில் சக்கர நாற்காலியில் இயங்கும் பெண்களுக்கான கூடைப்பந்து அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
‘‘எனக்கு நீச்சல்தான் ரொம்ப பிடித்திருக்கிறது. நான் கைகளை மட்டும் பயன்படுத்தியே நீச்சல் அடிக்கிறேன். ஆரம்பத்தில் பலர் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இப்போது நான் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறேன். அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது’’ என்கிறார்.