பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க ஆட்டோ மீட்டரில் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க ஆட்டோ மீட்டரில் மோசடியில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி கூறினார்.;

Update:2018-02-18 04:15 IST
மும்பை,

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க ஆட்டோ மீட்டரில் மோசடியில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி கூறினார்.

ஆட்டோ மீட்டரில் மோசடி

மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்தவர் சச்சின். சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஜோகேஸ்வரி பகுதியில் ஆட்டோவில் சென்றார். அப்போது, அந்த ஆட்டோவில் இருந்த மீட்டர் வழக்கத்தை விட வேகமாக ஓடியது.

இதனால் அவரது பயண கட்டணம் எகிறியது. அதிக கட்டணம் வசூலிக்க மீட்டரில் மோசடி செய்யப்பட்டு இருப்பதை சச்சின் வீடியோ ஆதாரங்கள் மூலம் சமூகவலைதளத்தில் அம்பலப்படுத்தினார்.

கடும் நடவடிக்கை


இந்த சம்பவம் குறித்து வடலா வட்டாரப்போக்குவரத்து அலுவலக அதிகாரி புருஷோத்தம் நிகம் கூறும்போது:-

மோசடியில் ஈடுபட்ட ஆட்டோவின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வழக்குப்பதிவு செய்ய உள்ளோம். இது தொடர்பான புகாரை மேக்வானி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைப்போம். தனிப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்