நவிமும்பையில், ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்

நவிமும்பையில், ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையை சேர்ந்தவர் ஆவார்.

Update: 2018-02-17 22:30 GMT
மும்பை,

நவிமும்பையில், ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையை சேர்ந்தவர் ஆவார்.

மருத்துவ மாணவர்

நவிமும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தவர் மாணவர் விமல்(வயது23). இவர், நேற்று திடீரென எம்.ஜி.எம். ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சக மாணவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லையை சேர்ந்தவர்

மாணவர் விமல் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். எனினும் அவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தார். மறுமதிப்பீடு செய்யப்பட்ட பிறகும் அவர் அந்த 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த மாணவர் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவர் விமலின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஆகும். மும்பை கோரேகாவ் பகுதியில் தந்தை சுவாமி பிள்ளை மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்