ஆனைமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
ஆனைமலை அருகே பூவலபருத்தியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பொள்ளாச்சி,
ஆனைமலை அருகே உள்ள பூவலபருத்தியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமம் கம்பாலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. பூவலப்பருத்திக்கு கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழியாற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆனைமலை-உடுமலை ரோட்டில் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலாளர் மற்றும் ஆழியாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள், ஒரு மாதத்திற்கு 2 முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் வினியோகம் செய்யும் குடிநீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். ஆகவே கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டதை குடிநீர் வடிகால் வாரியம் ஏற்று நடத்த வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனி முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.