ஜனதாதளம்(எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது குமாரசாமியால் மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் தேவேகவுடா பேச்சு
ஜனதாதளம்(எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்றும், குமாரசாமியால் மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் தேவேகவுடா பேசியுள்ளார்.
பெங்களூரு,

பொதுக்கூட்டம்
பெங்களூரு எலகங்கா அருகே ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் அந்த கூட்டத்தில் தேவேகவுடா பேசியதாவது:-
குமாரசாமியால் மட்டுமே முடியும்
கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக நம் கட்சி தொண்டர்கள் இப்போது இருந்தே கடினமாக உழைக்க வேண்டும். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது தான் கர்நாடகம் அபார வளர்ச்சி பெற்றது. விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க குமாரசாமியால் மட்டுமே முடியும். கர்நாடகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். தற்போது கூட ஹாசன், தாவணகெரே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 1½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்கா சோளப்பயிர்கள் நாசமடைந்தன. இதுபற்றி சித்தராமையாவுக்கு நான் கடிதம் எழுதினேன். அதுபற்றி சித்தராமையா கண்டு கொள்ளவேயில்லை. பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் சித்தராமையா ஒதுக்கவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளது.
யாராலும் அழிக்க முடியாது
காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே தான் சட்டசபை தேர்தல் நடைபெறுவதாக சித்தராமையா கூறி இருக்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி அழிந்து விட்டதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியை சித்தராமையா நினைத்தாலும் சரி, பா.ஜனதா கட்சியினர் நினைத்தாலும் சரி, யாராலும் கட்சியை அழிக்க முடியாது. அவர்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. மங்களூருவில் கடந்த 6 மாதங்களாக மதக்கலவரங்கள் நடந்து வருகிறது. காங்கிரசும், பா.ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். மதக்கலவரத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குமாரசாமி முதல்-மந்திரி ஆனால் மட்டுமே விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் கடன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். 124 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை வெற்றி பெற செய்து, குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விரிவாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.
கடினமாக உழைத்தால் வெற்றி
இந்த பொதுக்கூட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி பேசுகையில், “காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் ஆட்சியில் விவசாயிகள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கடன்காரர்களாக தான் உள்ளார்கள். ஜனதாதளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் உங்களை கடன் இல்லாமல் வாழ வைப்பேன். விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் 24 மணிநேரத்தில் தள்ளுபடி செய்யப்படும். மக்கள் படும் கஷ்டங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். எனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அதனால் ஓய்வெடுக்கும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடன் தொல்லையால் எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது எனது உடல் நலக்குறைவு பற்றி நான் கவலைப்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 70 நாட்கள் தான் உள்ளது. ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்காமல், ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பிரசாரம் செய்யுங்கள். மக்கள் பிரச்சினைகளை கேட்டு அறிந்து, அதனை தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளியுங்கள். இந்த 70 நாட்கள் கடினமாக உழைத்தால் நாம் வெற்றி பெறுவது உறுதி. நான் உங்கள் வீட்டுபிள்ளை. ஜனதாதளம்(எஸ்) கட்சியை வெற்றி பெற செய்யும்படி 6½ கோடி மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.