தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் 17 பேர் கைது
காவிரி மேல்முறையீட்டு தீர்ப்புக்கு எதிராக தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் 17 பேர் கைது
தஞ்சாவூர்,
தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை கருத்தில் கொள்ளாமல் ஒரு தலைப்பட்சமாக சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இந்த தீர்ப்புக்காக முதல்-அமைச்சர், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வலியுறுத்தியும், காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வேண்டியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தஞ்சை ரெயிலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் அருள், சிவானந்தம், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இவர்கள், தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமகாலிங்கம், பெரியசாமி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.