ரவுடிகளுடன் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
சேலம் கன்னங்குறிச்சியில் ரவுடிகளுடன் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் கருணாகரனை அதிரடியாக மாற்றி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
கன்னங்குறிச்சி,
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி சுசீந்திரன் (வயது29). இவன் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலையானார். இவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடன் நெருக்கமாக பழகியதும், பிறந்தநாளின்போது கேக் ஊட்டியதாகவும் தகவல் பரவியது. விசாரணையில், அந்த இன்ஸ்பெக்டர் தற்போது கன்னங்குறிச்சியில் பணியாற்றும் கருணாகரன் என்பது தெரியவந்தது.
சுசீந்திரனுக்கு, தனது எல்லைக்குட்பட்ட கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுடன் நல்ல தொடர்பு இருந்து வந்துள்ளது. நட்பாகவே இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். பின்னர் கேக்குடன் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனை நேரில் சந்தித்தார். அப்போது அவர், சுசீந்திரனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ படக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலா வந்தது.
இது தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டார். அப்போது, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கருணாகரனை அதிரடியாக மாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் போலீஸ் வட்டாரத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.