குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 22-ந் தேதி ஏலம்

மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வருகிற 22-ந் தேதி ஏலம் விடப்படுகின்றன.;

Update: 2018-02-17 21:30 GMT
மதுரை,

மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அரசுடமையாக்கி வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து மதிப்பீடு சான்று வழங்கியுள்ளது.

இந்த வாகனங்கள் ஏலத்திற்காக மதுரை அழகர்கோவில் ரோடு சர்வேயர் காலனியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 22-ந்தேதி காலை 10.30 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலும், மது விலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர், மாவட்ட தானியங்கி பணிமனை மண்டல பொறியாளர், மாவட்ட கலால் துணை ஆணையர் ஆகியோர் முன்னிலையிலும் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள் வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏலத்தில் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும். அதற்கு முன்பு வாகனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட முன்பண தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்