தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாலில் ஊற்றிய தண்ணீராக உள்ளன - மூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் பாலில் ஊற்றிய தண்ணீராக உள்ளன என்று புறநகர் மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் கேர்வில் சன்னதி தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். தொழிலாளர் அணி துணை செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கும்.
ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. அதற்கு காரணம் தி.மு.க.வுடன் பல கட்சிகள் கூட்டணி சேர்ந்திருந்த போதிலும், அவை பாலில் ஊற்றிய தண்ணீராக உள்ளன. ஒரு சிலர் கட்சி தலைமைக்கு தவறான தகவல்களை கூறி ஜால்ராக்கள் போட்ட வண்ணம் இருந்தனர். ஆகவே வெற்றி நம்மை விட்டு போனது. தமிழகத்தில் எப்ப வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். அதில் கட்சி செயல் தலைவரை முதல்-அமைச்சராக்குவோம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 4-ல் 3 பூத்துகளில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்கினை தி.மு.க. பெற்றது. மதுரை வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் அடுத்த மாதம் 19-ந்தேதி மதுரையில் தளபதியார் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதில் செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் கட்சி மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழியும் வழங்குகிறார். இந்த விழாவிற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேண்டும். இந்த விழா நடைபெறும் தருணத்தில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டாலும் ஆச்சிரியம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.