மீனவர்களின் பாதுகாப்புக்கு கையடக்க கருவி கண்டுபிடிப்பு
மீனவர்களின் பாதுகாப்புக்கு கையடக்க கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கொளத்தூர்,
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூரில் நிர்மலா மேல்நிலைப்பள்ளியின் 64-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் விஞ்ஞானியும், பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.
மேலும் விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக அவர் பள்ளி நிர்வாகம் சார்பில் வடிவமைக்கப்பட்ட விமானம் போன்ற ஒரு வாகனத்தில் இருந்து விழா மேடைக்கு இறங்கி வந்தார்.
இந்தியாவின் இஸ்ரோ மூலம் சந்திராயன் செயற்கைகோள் ஏவப்பட்டு நிலவில் உள்ள நீர் மற்றும் அங்குள்ள கனிம வளங்கள், தரை வடிவம் ஆகியவற்றை அறிய முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது சந்திராயன் 2 செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விண்கலம் நிலவில் இறங்கி அதன் பணிகளை செய்யும்.
மேலும் கடந்த மாதம் நானோ, மைக்ரோ, காட்ரோ ஆகிய 3 வகையான செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 100-வது செயற்கைகோள் ஆகும். இவைகள் ஏற்கனவே உள்ள செயற்கைகோள்களுடன் இணைந்து இயங்கி வருகிறது. மேலும் 6 டன் எடை கொண்ட ஜி.எஸ்.ஆர். 11 என்ற செயற்கைகோள் நேவிகேசனுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் 6 மீட்டர் விட்டமுள்ள ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் பங்கேற்க முடியும் என்ற வகையில் நானோ செயற்கைகோள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் ஆப் போல இந்த செயற்கைகோள்களின் மூலமாக மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் வழங்க முடியும். குறிப்பாக சுற்றுப்புறம், தூய்மை, பருவகால மாற்றம், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், கடலில் மீன்கள் அதிகம் உள்ளதை காட்டும் விதமாகவும், அவரவர் மொழிகளிலே தெரிவிக்கும் வகையில் கையடக்க கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகாய விமானம், கப்பல் ஆகியன 108 அவசர ஊர்திக்கு தகவல் தருவது போல சமிக்கை அனுப்பும் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இளம் விஞ்ஞானிகளின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளுக்கு பல்வேறு வழிகளில் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.