பாவூர்சத்திரம் அருகே பலசரக்கு கடையில் பணம் கொள்ளை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
பலசரக்கு கடையில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம்,
பலசரக்கு கடையில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
பலசரக்கு கடை
நெல்லை– தென்காசி மெயின்ரோட்டில் பாவூர்சத்திரம் அருகே உள்ளது நவநீதகிருஷ்ணபுரம். இங்கு மெயின்ரோட்டில் ஆதிநாராயணன் (வயது 73) என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடையுடன் சேர்ந்து அவரது வீடும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையில் பூட்டப்பட்டு இருந்த 4 பூட்டுகளில் 3 பூட்டுகள உடைக்கப்பட்டு இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆதிநாராயணன், கடைக்குள் சென்று பார்த்தார்.
பணம் கொள்ளை
அங்கு வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் சில பொருட்களும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை.
கைதேர்ந்தவர்கள்
இந்த கொள்ளை சம்பவம் நடந்த பலசரக்கு கடையானது எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ளது. எனவே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், கடைகளில் பூட்டை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது.
ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இந்த கொள்ளை நடந்து இருப்பதால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.